கௌரவ டாக்டர் ராஜித சேனரத்ன சேனாரத்ன சுகாதார போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்,
டாக்டர் ராஜித சேனரத்ன 1974 ம் ஆண்டின் பேராதெனிய பல்கலைக்கழக பல் அறுவைச் சிகிச்சை பட்டதாரி ஆவர். அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் மாணவர் தலைவராகவும், பொது செயலாளராகவும் 1971 ஆண்டில் இருந்து 1973ம் ஆண்டு வரை இருந்தார். அதன் பின்னர் இலங்கையின் பிரதம மந்திரியாக பிரதி நிதித்துவப்பட்டார்.
டாக்டர் சேனாரத்ன கடந்த 14 வருடங்களாக 1975 முதல் 1989 வரை மேன்மை தங்கிய காரிய தரிசியாக சேவையாற்றினார். அவர் ஒரு பிரபல்யமான தொழிற்சங்க வாதியாவர். அவருக்கு தொடர்ச்சியாக fellowship சான்றிதழ் சர்வதேச கல்லூரியால் பல் வைத்திய படிப்பிற்காக 1992 இல் வழங்கப்பட்டது.
டாக்டர் சேனாரத்ன HIV, AIDS ஆகியவற்றுக்கான ஆசிய நாட்டு உள் பாராளுமன்ற கருத்தரங்கு 2008இல் நடந்த போது இலங்கைக்கான பிரதிநிதியாக கலந்து கொண்டார். அவர் மேலும் சர்வதேச வைத்திய பாராளுமன்றத்துக்கான கருத்தரங்கு பேங்க்கொக் (bankkok) நகரில் 1995&1997 இல் நடைபெற்ற போது இலங்கை பிரதிநியாக கலந்து கொண்டார்.
1994 இல் இருந்து இன்று வரை தொடர்ந்து 2௦ ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றார். இவர் 2௦௦1-2௦௦4 காலப்பகுதியில் காணி அமைச்சராகவும், 2௦௦7-2010 காலப்பகுதியில் கட்டுமான மற்றும் பொறியியல் அமைச்சராகவும், 2010-2014 காலப்பகுதியில் கடற்றொழில் மற்றும் நீரியல் அபிவிருத்தி அமைச்சரகாவும் இருந்தார். தற்போது சுகாதார மற்றும் சுதேஷ மற்றும் வைத்திய அமைச்சராகவும் அரசாங்கம் மற்றும் எதிர் பிரதிநிதித்துவ படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவரது பேச்சு திறமை நன்கு அறியப்பட்டது.
கட்டுமான பொறியியல் அமைச்சராக (2௦௦7 – 2௦1௦) இவர் “ தேசிய கட்டுமான கொள்கை” உருவாக்கத்திற்கான கருவியாக செயற்பட்டார். Hungarian tied aid நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டுமானத்திற்கான கடல் மணல் தொடர்பில் கடல் நீர் சுத்திகரிப்பு ( உப்பை நீக்குதல் ) வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
அவரது பதவிக்காலத்தில் இலங்கை, கடல் கடந்த கட்டுமான வேலை திட்டங்களிலும் பிரவேசித்து அத்துடன் இவர் வெற்றிகரமான ஒரு இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கும் வ்வேலை திட்டத்தில் கட்டிடக் கலைஞராகவும் செயற்பட்டிருந்தார்.
அவர் உருவாக்கிய காணித் தரவு வங்கியானது அரச காணிகளில் குடியிருந்தவர்களில் 1.3 மில்லியன் பேருக்கு காணி உரித்துடைய உறுதியை வழங்குவதற்கு உதவியாக அமைந்தது.
2௦1௦ ஏப்ரலில் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சராக கடமைகளை ஏற்ற பின்னர் அவர் 2௦1௦ இல் 380,000 மெற்றிக் தொன்னாக இருந்த தேசிய மீன் உற்பத்தியை 2௦14 அளவில் கிட்டத்தட்ட 590,000 மெற்றிக் தொன்னாக அதிகரிக்கப்படும் நிகழ்ச்சி திட்டம் ஒன்றை மேற்கொண்டார். இவரது மீன் பிடி உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம் தென் ஆசியாவில் மிகப்பெரியதும் அதி நவீனமானதுமான டிக்கோவிட்ட மீன் பிடித் துறைமுகம் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் 29 மீன் பிடி துறை முகங்களை நிர்மானித்தல் மற்றும் தரம் உயர்த்துதல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. மேலும் இவர் மீன்களை தகரங்களில் அடைக்கும் ௦5 தொழிற்சாலையை உருவாக்குவதற்கும் கருவியாக செயற்பட்டதுடன் பேலிய கொடா மொத்த வியாபார மீன் சந்தை உருவாக்குவதற்கும் காரணமாக இருந்தார்.
டாக்டர் சேனாரத்னவின் நிலை நிறுத்தமான வளப் பயன்பாட்டு, முகாமைத்துவம் தொடர்பான ஈடுபாடு இலங்கையில் சகல பல நாள் படகுகளுக்குமான கப்பல் கண்காணிப்பு முறைமை ஒன்றினை அறிமுகப்படுத்தியமை உள்ளடங்களாக தேசிய மற்றும் சர்வதேச முன்னெடுப்புக்கள் ஊடக சட்ட விரோதமான தகவல் அறிவிக்கப்படாத மற்றும் பதிவு செய்யப்படாத (iuu) மீன் பிடியினை தடுப்பதற்கான அவருடைய கடுமையான முன்னெடுப்புக்கள் ஓர் எடுத்துகாட்டாக விளங்கின.
சர்வதேச மட்டத்தில் அவர் உலகளாவிய வகையில் மீன் பிடி கைத்தொழிலுக்கான ஸ்தரமான தொரு தளத்தை உருவாக்கி பிராந்திய மீன் பிடி முகாமைத்துவ நிறுவனம், இந்தியன் ஓசன் டியூன கொமிசனுடன் (IOTC) நாட்டினுடைய தொடர்பினை ஸ்தரப்படுத்தியுள்ளார்.
உண்மையில் 2௦11 ஜூலையில் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான நீரியல் தொடர்பான அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தினூடாக 25 நாடுகளின் பங்கு பற்றலுடன் 2௦11 மார்ச் இல் இலங்கையில் IOTC அமர்வில் மிகவும் வெற்றிகரமாகவும் சிறப்பான முறையிலான பங்களிப்பினை வழங்கியமைக்காக டாக்டர் சேனாரத்னவுக்கான கௌரவம் அதிகரித்துள்ளதுடன் 2௦11 ஜூலையில் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான நீரியல் வளம் தொடர்பான அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டமும் தொடர்ந்து நடைபெற்றது. அவருடைய ஆற்றல் மிக்க அபிவிருத்தி சார்ந்த நிகழ்ச்சித் திட்டங்கள், பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் ஆற்றல் மிக்க அபிவிருத்தி சார்ந்த நிகழ்ச்சி திட்டங்கள் பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் கவனத்தை ஈர்ந்தது. அவரது 2௦1௦ செப்ரம்பரில் BANKOK இல் நடைபெற்ற 11 ஆவது INFOFISH உலக ரியூனா வர்த்தக மாநாட்டிற்கான முக்கிய விடயங்களை ஊக்குவிக்கும் அவரது சிந்தனைகள் பற்றிய உரை FAO கவுன்சில் அமர்வுக்கான பங்களிப்புக்கள் FAO வர்த்தகம் மற்றும் நீரியல் வள உப குழுக்கள் மற்றும் பல்வேறு சர்வதேச மன்றங்கள் என்பவற்றிற்கான இவரது பங்களிப்புக்கள் பெருமளவில் பாராட்டுதல்களை பெற்றன.
டாக்டர் சேனாரத்ன நாட்டின் அரசியல் வரை படத்தினை மாற்றியமைக்கும் சமூக அரசியல் முன்னெடுப்புக்களில் அவரது முக்கிய வகிபாகத்துடன் 2௦14 இன் இறுதிப்பகுதியில் அரசியலில் வெளிச்சத்திற்கு மீண்டும் அவர் உந்தப்பட்டார். அவர் நல்லாட்சி மற்றும் 1௦௦ நாள் நிகழ்ச்சித்திட்டம் என்பதை தழுவியதாக ஜனவரியில் அதி உத்தம ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய சிறிசேன அவர்களுக்கு கீழ் உருவாக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் முக்கிய சிற்பிகளில் ஒருவராகவும் விளங்குகின்றார். டாக்டர் சேனாரத்ன சுகாதார சுதேச வைத்திய அமைச்சராகவும் அவ்வாறே புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராகவும் பணியாற்றுகின்றார். அதையடுத்து அதி உத்தம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக இருந்த போது எடுக்கப்பட்ட முன்னெடுப்புக்கள் நோக்கிய உறுதியுடனான தரவுகள் தொடர்பில் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் நீண்டகாலமாக தாமதமாகியிருந்த தேசிய மருத்துவ மருந்து கொள்கை (NMDP) அல்லது திருத்தப்பட்ட பிடிலே மருந்துகள் கொள்கைக்கான அமைச்சரவை அங்கீகாரத்தை திருப்திகரமான முறையில் பெற்றுக்கொண்டார். இது அங்கீகாரத்திற்காக மிக விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
டாக்டர் சேனாரத்ன பல் வைத்திய நிபுணரான திருமதி சுஜாதா சேனாரத்னவை மணம் புரிந்துள்ளார். அவர் ஒரு பல் வைத்திய நிர்வாக நிபுணராகவும் உள்ளார். தற்போது கௌரவ அமைச்சருக்கு தனிப்பட்ட செயலாளராகவும் பணி புரிகின்றார். டாக்டர் சுஜாதா சேனாரத்ன இலங்கை தேசிய வைத்தியசாலை மற்றும் சிறுவர்களுக்கான லேடி ரிச்வே வைத்தியசாலை உள்ளடங்கலாக பல் தேசிய மட்டத்திலான சுகாதார நிறுவனங்களில் சிரேஸ்ட மருத்துவ நிர்வாகி ஒருவராகவும் பணி புரிந்துள்ளார். இவர் சேவையிலிருந்து இளைப்பாறும் போது மேலதிக செயலாளராக ( பொது சுகாதார சேவைகள் ) பணியாற்றி இருந்தார். இவருக்கு சத்துர, மற்றும் எக்சத் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.