சுகாதார அமைச்சு

ஶ்ரீ லங்கா

 

ஹோப் வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று அறுவை சிகிச்சை 2016-11-01

மகரகம ஹோப் மருத்துவமனையில் , எலும்பு மச்சை (Bone marrow) மாற்று அறுவை சிகிச்சைகள் செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சுகாதார அமைச்சின் மகரகம ஹோப் மருத்துவமனை, புற்றுநோய் நோயாளிகளுக்கு எலும்பு மச்சை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்ய முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமான ஊடகவியலாளர் சந்திப்பு சுகாதாரக் கல்விப் பணியகத்தில் 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சைகள் ஆஸ்திரேலியாவிலுள்ள வின்ஸ்டன் மருத்துவமனை பேராசிரியர் எம் ஏ டேவி ட்டின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும். இது இலங்கையில் முதல் முறையாக புற்று நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படவிருக்கும் எலும்பு மச்சை மாற்று அறுவை சிகிச்சை ஆகும். இப்போது வரை இது போன்ற அறுவை சிகிச்சை கிட்டத்தட்ட 30-40 மில்லியன் ரூபா செலவில் சிங்கப்பூர் அல்லது இந்தியா போன்ற நாடுகளில் செய்யப்பட்டது. தற்போது வரை , மகரகம, ஹோப் மருத்துவமனையில் இந்த சத்திர சிகிட்சைக்கு பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 100 ஐ தாண்டுகிறது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் புற்றுநோய் மருத்துவ ஆலோசகர் டாக்டர் பிரசாத் அபேசிங்க, கருத்து தெரிவிக்கையில் "நான்கு சிறப்பு மருத்துவர்கள் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அறுவை சிகிச்சைகள் செய்ய ஆஸ்திரேலியாவின் வின்ஸ்டன் மருத்துவமனையில் விசேட பயிற்சி பெற்றுள்ளனர். எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அறுவை சிகிச்சை இரண்டு வகைகள் உள்ளன. நாங்கள் முதலில் “autologous type – self to self" அதாவது நோயாளியின் உடலில் இருந்து அவருக்கே மாற்றும் முறையை செயட்படுத்துவோம். அது வெற்றி அளிக்குமிடத்து “allogenic type - donor to self”” அதாவது கொடையாளி ஒருவரின் எலும்பு மச்சையை நோயாளிக்கு பொருத்தும் முறையை ஆரம்பிப்போம்." என குறிப்பிட்டார்.