சுகாதார அமைச்சு

ஶ்ரீ லங்கா

 

இதய நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்  stents தவறான முறையில் பயன்படுத்வதப்படுதை  நிறுத்துவதற் 2016-10-13

இதய நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்  stents தவறான முறையில் பயன்படுத்வதப்படுதை  நிறுத்துவதற்கான சிறப்பு சுற்றறிக்கை
சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் கெளரவ. டாக்டர் ராஜித சேனாரத்ன, இதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்ய சுகாதார அமைச்சு இறக்குமதி செய்த stents களை  பயன்படுத்துமாறு  அனைத்து இருதயநோய் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்களையும்  கோரியுள்ளார். அமைச்சர் இந்த stents தவறான முறையில் பயன்படுத்தப்பட  கூடாது என்று கூறினார். இது கொழும்பு தேசிய வைத்தியசாலை, மற்றும் பொரளை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை ஆகியவற்றில் இருந்து கலந்து கொண்ட  இருதயநோய் நிபுணர்கள் பங்குபற்றுதலுடன் அமைச்சில்  நடைபெற்ற கூட்டத்தில் கூறப்பட்டது.
அமைச்சர் stents  தவறாக பயன்படுத்தப்படுவதை  தடுக்க இதய அறுவை சிகிச்சைகள் செய்யும்  எல்லா  மருத்துவமனைகளுக்கும்  ஒரு சிறப்பு சுற்றறிக்கையை வெளியிட உத்தரவிட்டார். இதன்போது  இலவச stents பயன்படுத்தி செய்யப்படும்  அறுவை சிகிச்சை குறித்து ஒரு மதிப்பீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக 500 stents  மருத்துவ வழங்கல்  பிரிவினால்  இருதயநோய் நிபுணர்களின்  பரிந்துரைக்கு அமைய கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்டென்ட்டுக்குமான செலவினம்  ரூபாய் 75,000. மேலும், சுகாதார அமைச்சு இந்த நோக்கத்திற்காக 37 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளது. இவை  ஏற்கனவே மருத்துவமனைகளுக்கு  அனுப்பப்பட்டிருக்கிறது. மருத்துவ வழங்கல் பிரிவு மேலதிகமாக 3 மாதங்களுக்கு தேவையை stents கொள்வனவு செய்ய எதிர்பார்த்திருக்கிறது. மேலும், 2017 ஆம்  ஆண்டுக்கான stents கொள்வனவு செய்ய ஏற்கனவே அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர்  கெளரவ. டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.